விஜய் தொலைக்காட்சியில் அக்டோபர் 3 முதல் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகும் போட்டியாளர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது. இதனிடையே அவ்வப்போது இவர்கள் தான் பிக்பாஸில் பங்கேற்பார்கள் என சில செய்திகளும் வெளியாகி வந்தது.
இந்நிலையில் தற்போது மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வாத்தி கம்மிங் பாடலுக்கு விஜய் அருகில் நின்று நடனமாடிய சிபியும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்யின் மாணவராக நடித்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போக இருப்பது தளபதி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.