Categories
சினிமா தமிழ் சினிமா

‘மாஸ்டர்’ நாயகி மாளவிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம்… இணையத்தில் செம வைரல்…!!!

நடிகை மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது .

தமிழ் திரையுலகில் நடிகை மாளவிகா மோகனன் ‘பேட்ட’ படத்தில் அறிமுகமானார். இதையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார் . இந்த படம் வருகிற பொங்கல் தினத்தில் திரையரங்கில் வெளியாக உள்ளது . இந்த படத்திற்காக ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் மிக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர் .

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை மாளவிகா மோகனன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் மாஸ்டர் பட போஸ்டரை பதிவிட்டு அதோடு முகக்கவசம் குறித்த விழிப்புணர்வு வீடியோவையும் வெளியிட்டிருந்தார் . மேலும் அவ்வப்போது தனது புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார் . இந்நிலையில் நடிகை மாளவிகா மோகனன் வெண்மை நிற உடையணிந்து எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் . இந்த புகைப்படம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது .

Categories

Tech |