Categories
சினிமா தமிழ் சினிமா

‘மாஸ்டர்’ பட நடிகையா இவர்?… கருப்பு நிற புடவையில் சுரேகா வாணி வெளியிட்ட புகைப்படங்கள்…!!!

மாஸ்டர் பட நடிகை சுரேகா வாணியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘மாஸ்டர்’. இந்தப்படத்தில் மாளவிகா மோகனன் ,விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் . பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் வசூலில் பட்டைய கிளப்பியது. மேலும் சமீபத்தில் இந்த படத்தின்  நீக்கப்பட்ட காட்சி ஒன்று வெளியாகி வைரலானது.

அந்த காட்சியில் தவறு செய்த கல்லூரி மாணவனின் அம்மாவாக நடித்திருந்தவர்  நடிகை சுரேகா வாணி. இவர் பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தவர். இந்நிலையில் நடிகை சுரேகா வாணி கருப்பு நிற புடவையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலர் ‘மாஸ்டர்’ படத்தில் அம்மாவாக நடித்திருந்த நடிகையா இவர்? என ஆச்சரியமடைந்துள்ளனர் .

 

Categories

Tech |