‘மாஸ்டர்’ பட தயாரிப்பாளர் அடுத்ததாக தயாரிக்க உள்ள படத்தை அஜித் பட இயக்குனர் ஒருவர் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘மாஸ்டர்’. பொங்கலுக்கு தியேட்டர்களில் வெளியான இந்த படம் சுமார் 200 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது . இந்த படத்தை நடிகர் விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரித்திருந்தார். தற்போது இவர் அடுத்ததாக தயாரிக்கும் படத்தில் அவரது மருமகனும் நடிகர் அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தை அஜித்தை வைத்து பில்லா மற்றும் ஆரம்பம் என இரண்டு ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.