‘மாஸ்டர்’ படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை நடிகர் விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் தளபதிக்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ் ,சாந்தனு, ஆண்ட்ரியா ,சஞ்சீவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் வருகிற ஜனவரி 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
#Master from 13th Jan. pic.twitter.com/lL3kVMoT1i
— VijaySethupathi (@VijaySethuOffl) January 10, 2021
இந்த படம் வெற்றி பெற வேண்டி மாஸ்டர் படக்குழுவினர் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்துள்ளனர். அங்கு எடுத்த செல்பி புகைப்படத்தை இசையமைப்பாளர் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி மாஸ்டர் படப்பிடிப்பின்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.