Categories
சினிமா தமிழ் சினிமா

‘மாஸ்டர்’ படத்தை திரையரங்கில் பார்த்த தளபதி… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!!

நடிகர் விஜய் ‘மாஸ்டர்’ படத்தை பார்க்க தியேட்டருக்கு சென்றுள்ள வீடியோ இணையத்தில் பரவி வருகிறது .

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘மாஸ்டர்’ . உலகம் முழுவதும் வெளியான இந்த திரைப்படம் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது . இந்த படத்தை பார்த்த பிரபலங்களும் ரசிகர்களும் பெரும்பாலும் பாசிட்டிவ் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர் .

இந்நிலையில் நடிகர் விஜய் மாஸ்டர் திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்ப்பதற்காக சென்னையில் உள்ள ஒரு தியேட்டருக்கு சென்றுள்ளார் . அங்கு அவர் ரசிகர்களுடன் படம் பார்த்ததாக கூறப்படுகிறது . தற்போது இதுகுறித்த சிசிடிவி விடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் தீயாய் பரவி வருகிறது .

Categories

Tech |