மாஸ்டர் திரைப்படத்தின் ட்ரெய்லரை தான் பார்க்க தவறிவிட்டதாக நடிகர் சாந்தனு வருத்தம் தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் நடிகர் விஜய் நடித்திருக்கின்ற மாஸ்டர் படத்தில் வில்லனாக விஜய் சேதுபதியும், முக்கிய வேடத்தில் சாந்தனு பாக்கியராஜ் அவர்களும் நடித்திருக்கின்றனர். நடிகர் விஜயின் பெரும் ரசிகனான சாந்தனு அவர்கள் விஜயுடன் சேர்ந்து நடித்திருக்கும் முதல் படம் இதுவே ஆகும். அவர் தற்பொழுது மாஸ்டர் படத்தின் ட்ரெய்லரை பற்றி தன்னுடைய வருத்தத்தை வெளிக்காட்டியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு மாஸ்டர் படத்தின் ட்ரெய்லரை விஜய் சேதுபதியும், இப்படத்தில் முக்கிய வேடமிட்டு நடித்துள்ள அர்ஜுன் தாஸ் அவர்களும் பார்த்துவிட்டு படம் மிகவும் மாஸாக அமைந்துள்ளது என தெரிவித்திருந்தார்கள்.
தயாரிப்பாளர் லோகேஷ் கனகராஜ் தான் அவர்களை ஸ்டூடியோவிற்கு அழைத்து ட்ரெய்லரை போட்டுக் காட்டினார். அதோடு சாந்தனுக்கும் அவர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் ட்ரெய்லரை காண்பதற்கு தான் தனக்கு அழைப்பு விடுத்தார்கள் என்று அறியாமல் ஊரடங்கு காரணத்தால் ஸ்டுடியோவிற்கு சாந்தனு செல்லவில்லை. இத்தகைய காரணத்தால் ட்ரெய்லர் ட்ரெய்லரை காண்பதற்கான வாய்ப்பை தான் தவற விட்டுவிட்டேன் என தனது வருத்தத்தை ஒரு ரசிகராக சாந்தனு வெளிபடுத்தியுள்ளார்.