‘மாஸ்டர்’ படத்திற்காக ஆண்ட்ரியா வில்வித்தை பயிற்சி எடுத்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள ‘மாஸ்டர்’ படம் பொங்கல் விருந்தாக திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனனும் வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். இந்த படத்தில் அர்ஜுன் தாஸ் ,சாந்தனு , சஞ்சீவ்,உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மேலும் ‘மாஸ்டர்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகை ஆண்ட்ரியா நடித்துள்ளார் . இந்நிலையில் மாஸ்டர் படத்திற்காக நடிகை ஆண்ட்ரியா வில்வித்தை பயிற்சியில் ஈடுபட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது .