‘மாஸ்டர்’ படத்தின் தயாரிப்பாளர் அடுத்ததாக தயாரிக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘மாஸ்டர்’. பொங்கல் தினத்தில் திரையரங்குகளில் வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலை வாரிக் குவித்தது. இந்தப் படத்தை விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரித்திருந்தார்.
இந்நிலையில் மாஸ்டர் பட தயாரிப்பாளர் அடுத்ததாக தயாரிக்கவுள்ள படத்தில் அவரது மருமகனும், நடிகர் அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது . விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது . தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவின் மகள் சினேகாவும் ,நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் . கடந்த ஆகஸ்ட் மாதம் இவர்களது திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது .