பிக்பாஸ் பிரபலம் கவின் மாஸ்டர் பட விஜய் கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது .
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலின் மூலம் அறிமுகமானவர் கவின். இந்த சீரியலில் வேட்டையன் கதாபாத்திரத்தில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார் . இதையடுத்து இவர் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதிக அளவு பிரபலமடைந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கவின் ‘மாஸ்டர்’ பட விஜய் கெட்டப்பில் செக்கெட் ஷர்ட் அணிந்து இருக்கும் புகைப்படங்கள் வெளியானது . இதனை அவரது ரசிகர்கள் ஐடி கார்டு , ஹெட் செட் போட்டு ‘மாஸ்டர்’ ஜேடி கெட்டப்புக்கு மாற்றியிருக்கிறார்கள். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது .