சவூதியின் இளவரசர் மசூதிகளின் பாதுகாப்பு பணிகளுக்கு முதன்முறையாக ராணுவபடையில் உள்ள பெண்களை நியமனம் செய்துள்ளார்.
சவூதியின் இளவரசர் முகமது பின் சல்மான் ஆவார். இவர் சவூதியிலுள்ள பெண்களுக்கு என பல்வேறு சீர்திருத்தங்களை செய்து வருகிறார். அதில் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அனைவரும் பாதுகாவலர் இன்றி பயணம் செய்ய அனுமதி, சொத்துரிமையில் அதிக கட்டுப்பாடு வழங்குதல், பெண்களுக்கு வாகனம் ஓட்டும் உரிமை, ராணுவத்தில் பெண்கள் சேர்ப்பு என பலவற்றை அறிவித்துள்ளார். இந்த நிலையில் முதன் முறையாக இராணுவ படையிலுள்ள பெண்களை மெக்கா மற்றும் மதினா மசூதிகளில் பாதுகாப்பு பணிக்கு நியமனம் செய்துள்ளார்.
இதில் அவர்களுக்கு காக்கி நிற சீருடை வழங்கப்பட்டுள்ளது. மேலும் நீளமான மேல் சட்டை மற்றும் தளர்வான கால் சட்டையுடன் கருப்பு வண்ண தொப்பியும் கொடுக்கப்பட்டுள்ளது. இவர்களின் முகத்தை மறைப்பதற்கு துணியும் வழங்கப்பட்டுள்ளது. சவூதி பெண்களுக்கென அதிக கட்டுப்பாடுகள் விதித்துள்ள நாடாகும். ஆனால் இளவரசரின் பல்வேறு சலுகைகள் பெண்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.