நேற்று நடைபெற்ற போட்டியில் ,ராஜஸ்தான் அணி வீரரான ரியான் பராக், மைதானத்தில் செல்பி எடுப்பது போன்ற போஸ் கொடுத்திருப்பது ரசிகர்களை ஈர்த்துள்ளது.
நேற்று மும்பையில் நடந்த போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தால், முதலில் கொல்கத்தா அணி பேட்டிங்கில் களமிறங்கியது. வழக்கம் போல கொல்கத்தா அணி தொடக்கத்திலிருந்தே பேட்டிங்கில் சொதப்பிய வந்தது. அடுத்தடுத்து வீரர்கள் ஆட்டமிழந்து வெளியேறினர். அப்போது கொல்கத்தா அணி ராகுல் திரிபாதி தனியாளாக பேட்டிங்கில் போராடி கொண்டிருந்தார்.
அந்த ஓவரில் பந்துவீசிய முஸ்தஃபிசுர் ரகுமானின் பந்தை, திரிபாதி அடிப்பதற்காக தூக்கி வீசி அடித்தார். ஆனால் அந்த பந்தை பவுண்டரி லைனில், நின்றுக்கொண்டிருந்த ரியான் கேட்ச் பிடித்து விட்டார். இதனால் திரிபாதியை விக்கெட் வீழ்த்திய உற்சாகத்தில் ரியான் பராக், அருகிலிருந்த திவாட்டியாவுடன் இணைந்து ,செல்பி எடுப்பது போல மைதானத்தில் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
https://twitter.com/AsmiThakkar/status/1385985444354007041