திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் சில தினங்களுக்கு முன்பு தலை நசுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். ஆசிரியர் ஒருவருடனான கள்ளக்காதல் காரணமாக அவரது கணவர் கூலிப்படையை ஏவி அவரை கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஆத்தூரை அடுத்த கங்காபுரம் பகுதியை சேர்ந்த ஆசிரியர் சிவகுமார். ஊத்தங்கரை ஜோதி நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே ராமகிருஷ்ணாபுரத்தில் தலை சிதைக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது செல்போன் தொடர்புகளை விசாரித்ததில் கொலையாளி யார் என்பது கண்டுபிடிக்கப்பட்டன. சிவகுமாருடன் பணிபுரிந்து வருபவர் அறிவியல் ஆசிரியர் லட்சுமி. அப்பெண்ணுடன் சிவகுமார் அடிக்கடி பேசி வந்துள்ளார்.
ஆசிரியை மற்றும் அவரது கணவர் இளங்கோவை பிடித்து விசாரித்தனர். அப்போது இளங்கோ கூலிப்படையை ஏவி அவரை கொலை செய்தது தெரிய வந்துள்ளது. லட்சுமியுடன் நட்பாக பழகி வந்த சிவகுமார் அவரை காதல் வலை வீசி கவித்துள்ளார். இத்தனைக்கும் ஆசிரியை லட்சுமி காதலித்து தான் இளங்கோவை திருமணம் செய்துள்ளார். சிவக்குமாருடன் சேர்ந்து மனைவி உல்லாசமாக இருப்பதை அறிந்த இளங்கோ அவரை கண்டித்துள்ளார்.
இருப்பினும் அவர் கேட்காததால் கூலிப்படையை ஏவி சிவக்குமாரின் கைகளை உடைய ஒரு லட்சம் பணம் தந்துள்ளனர். அதன்படி ஊத்தங்கரை இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வரும் பிரபல ரவுடி வெள்ளைச்சாமி மற்றும் கூட்டாளிகள் பள்ளியில் இருந்து வீடு திரும்பிய ஆசிரியரே காரில் கடத்தி சென்று கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் தள்ளிவிட்டு சென்றுள்ளனர். அவர் சுயநினைவோடு இருந்ததால், முனங்கியபடி இருந்துள்ளார். எப்படியாவது எங்களை காட்டிக்கொடுத்து விடுவார் என்ற பயத்தில் அவரது தலையில் காரை ஏற்றி கொலை செய்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.