உக்ரைன் அரசு ரஷ்ய சார்பில் கிறிஸ்தவ மத குருக்கள் மீது பொருளாதார தடை விதித்துள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 10 மாதங்களாக தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த போரினால் இருதரப்பிலும் உயிர் சேதம் அதிகமாகியுள்ளது. இதனால் உக்ரைனில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து உக்ரைன் அரசு ரஷ்யாவிற்கு பதிலடி கொடுத்து வருகின்றது. மேலும் உக்ரைன் நாட்டிற்கு இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா போன்ற பல நாடுகள் ராணுவ உதவிகளை செய்து வருகின்றது.
இதனால் உக்ரைன் ராணுவம் ரஷ்யாவிடமிருந்து சில பகுதிகளை மீட்டுள்ளது. இந்நிலையில் உக்ரைன் அரசு ரஷ்ய சார்பு கிறிஸ்தவ மத குருக்கள் மீது பொருளாதாரத் தடையை விதிக்க உத்தரவிட்டுள்ளது. மேலும் ரஷ்ய சார்பு தேவாலயத்துடன் 10 மூத்த மத குருக்கள் தொடர்பில் உள்ளதாகவும், அந்நாட்டு அதிகாரிகளுடன் பணியாற்ற அவர்கள் சம்மதித்ததாகவும் புகார் எழுந்தது. இதனால் உக்ரைன் அரசு நடவடிக்கை எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.