தமிழ்நாடு அரசு வருவாய்த் துறையில் காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர் : கிராம உதவியாளர்
காலிப்பணியிடங்கள்:
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி வட்டத்தில் அமைந்துள்ள 14 கிராம ஊராட்சிகளில் கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்தில்உள்ள 8 கிராம ஊராட்சிகளில் கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி வட்டத்தில் உள்ள 2 கிராம ஊராட்சிகளில் கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
வயது வரம்பு:
வயது 01.01.2022 அன்று குறைந்தபட்சம் 21 ஆண்டுகள்.
அதிகபட்சமாக பொதுப்பிரிவினருக்கு 32 ஆண்டுகள்,
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர்மரபினருக்கு 34 ஆண்டுகள்,
தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 37 ஆண்டுகள்.
கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் :ரூ 11,100 -35,100
தேர்வு செய்யும் முறை : நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை:
மேற்குறிப்பிட்ட தகுதிகளுடைய நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து கல்வித்தகுதி, இருப்பிடச் சான்று, வயது, சாதி குறித்த ஆவணங்களின் சான்றொப்பமிட்ட நகல்களுடன் பின்வரும் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
வட்டாட்சியர்,
வட்டாட்சியர் அலுவலகம்,
பொன்னேரி / கும்மிடிப்பூண்டி / பூவிருந்தவல்லி
விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.01.2022
IMPORTANT LINKS
https://cdn.s3waas.gov.in/s39431c87f273e507e6040fcb07dcb4509/uploads/2022/01/2022010442.pdf
https://cdn.s3waas.gov.in/s39431c87f273e507e6040fcb07dcb4509/uploads/2022/01/2022010474.pdf
https://cdn.s3waas.gov.in/s39431c87f273e507e6040fcb07dcb4509/uploads/2022/01/2022010699.pdf