Categories
உலக செய்திகள்

‘எங்களுக்கு சந்தேகமாக உள்ளது’…. டென்னிஸ் வீராங்கனை அனுப்பிய மின்னஞ்சல்…. பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விவகாரம்….!!

காணாமல் போன டென்னிஸ் வீராங்கனை அனுப்பிய மின்னஞ்சலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உலகின் புகழ்பெற்ற சீன டென்னிஸ் வீராங்கனையான பெங் சூவாய் கடந்த 2013ல் விம்பிள்டன் கிராண்ட் சிலாம் மற்றும் 2014ல்  பிரெஞ்சு ஓபன் போன்ற பட்டங்களை தைவானைச் சேர்ந்த ஹசீ சூ வெய்யுடன் இணைந்து வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில் இவர் சீனாவின் முன்னாள் துணைப்பிரதமரும் தற்பொழுது ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஜாங் கோலி குறித்து சமூக ஊடகத்தில் பாலியல் குற்றச்சாட்டு ஒன்றை பதிவு செய்தார்.

அதில் “மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கோலி அவரது வீட்டிற்கு அழைத்து என்னுடன் டென்னிஸ் விளையாடினார். இதன் பிறகு என்னை அவரது படுக்கறைக்கு அழைத்து சென்று பாலியல் வன்புணர்வு செய்தார்” என்று கூறியிருந்தார். இவர் அதிபர் ஜின்பிங்வுடன் நெருக்கமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குற்றச்சாட்டை வெளியிட்ட நாள் முதல் அவர் காணாமல் போனார். மேலும் அவர் வெளியில் நடமாடவில்லை. அவர் குறித்து எந்தவொரு தகவலும் வெளிவரவில்லை.

அதிலும் அவர் என்ன ஆனார் எங்கு இருக்கிறார் என்பது தொடர்பாக எதுவும் தெரியவில்லை. குறிப்பாக டென்னிஸ் மகளிர் சங்கம் அவரை தொடர்பு கொள்ள முயற்சித்தும் அது முடியாமல் போனது. இந்த நிலையில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது பெங் சூவாய் பெயரில் டென்னிஸ் மகளிர் சங்கத்தின் தலைவரான ஸ்டீவ் சைமனுக்கு மின்னஞ்சல் ஓன்று அனுப்பப்பட்டுள்ளது. இதனை நேற்று முன்தினம் பிரபல தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டது. அதில் “நான் காணாமல் போகவில்லை.

குறிப்பாக நான் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறேன். என் வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டு நன்றாக இருக்கிறேன்” என்ற குரல் ஒலி பதிவாகியிருந்தது. இருப்பினும் இந்த பதிவானது டென்னிஸ் மகளிர் சங்கம் தலைவருக்கு சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டதாவது ” பெங் சூவாய் பெயரில் அனுப்பப்பட்ட மின்னஞ்சல் அவர் தானா என்பதில் எங்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் அதை நம்புவது கடினமாக உள்ளது.

அவருடைய பாதுகாப்பு மற்றும் இருப்பிடம் பற்றி எங்களுக்கு கவலை அளிக்கிறது. அதிலும் எங்கள் சங்கமும் இந்த உலகமும் அவர் பாதுகாப்பாக தான் இருக்கிறார் என்பதற்கு நம்பத்தகுந்த ஆதாரங்கள் தேவைப்படுகிறது. மேலும் அவர் அளித்துள்ள பாலியல் புகார் மீது முழுமையான வெளிப்படைத் தன்மையுடன் கூடிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். குறிப்பாக பெண்களின் குரல்கள் வெளியுலகிற்கு கேட்கப்பட வேண்டும். அவர்கள்  அனைவராலும் மதிக்கப்பட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த விவகாரமானது சீனாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |