மேத்தி சப்பாத்தி
தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு – 1 கப்
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
கடலை மாவு – 1/2 டேபிள்ஸ்பூன்
வெந்தயக் கீரை – 1 சிறிய கட்டு
மிளகாய்த்தூள் – 1/4 டீஸ்பூன்
அம்சூர் பவுடர் – 1 டீஸ்பூன்
நெய் – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும ஒன்று சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு நன்கு பிசைந்து அரை மணி நேரம் ஊறவிடவும். பின் பிசைந்த மாவை சப்பாத்திகளாக தட்டி, தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு சுட்டு எடுத்தால் மேத்தி சப்பாத்தி தயார் !!!