Categories
அரசியல் மாநில செய்திகள்

DMK பெயருக்கு யோசனை சொன்ன ”மதி”…. திமுகவுக்கு கிடைத்த பொக்கிஷம் மதி… உணர்ச்சி பெருக்கில் பேசிய வைகோ …!!

மதிமுக பொதுச்செயலாளர் அரசியல் சார்ந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய போது, ரத்தம் சிந்தி, கண்ணீர் சிந்தி, வியர்வை சிந்தி, திராவிட இயக்கத்தை நிலை நாட்டினோம் என்று நாம் சொல்கிறோம் என்றால் அதிலே ”மதி” அவர்களுடைய இரத்தம் இருக்கிறது. ”மதி” அவர்களுடைய குருதி இருக்கிறது.  திராவிட இயக்கக் கொடியை ஏற்றுவதிலேயே அவருடைய ரத்தம் கலந்து இருக்கிறது. அப்படிப்பட்ட ”மதி” அவர்கள்…

முதல் வகுப்பிலே முதல் இடத்திலே பல்கலைக்கழகத்தில் அவர் வெற்றி பெற்ற பிறகு…  பெரியாரின்,  அண்ணா அவர்களுடைய  கருத்தில் வேறுபட்டு, பிரிந்த பிறகு,   அண்ணா அவர்கள்..  அப்போது எல்லாம் வந்தால்,  வெள்ளாளர் தெருவிலே ”பேராசிரியர்” வீட்டில் தங்குவார். இல்லை செம்புவாய் தெருவிலே இருக்கக்கூடிய  ”மதி”யழகன் அறையிலே தான் தங்குவார்.

மதியழகன் உடைய அறையில் தங்கி அவரோடு மணிகணக்காக விவாதித்துக் கொண்டு இருப்பார். அப்படி விவாதித்துக் கொண்டிருக்கும் போது அந்த காலகட்டத்தில் தான்,  என்ன பெயர் வைப்பது இயக்கத்திற்கு… ?  திராவிட கழகத்திலிருந்து வந்து விட்டோம். நாம என்ன பெயர் வைப்பது என்று அவர்கள் நீண்ட நேரம் ஆலோசித்து…  பல பெயர்களை யோசித்து…

பிறகு திரவிடியன் பிரகரசிவ் பெடேரசன் ( திராவிடர் முன்னேற்றக் கழகம்) என்ற அந்தப் பெயருக்கு தமிழில் அவர்கள் அர்த்தப்படுத்தினார்கள். அப்போது மதி அவர்கள் சொன்னார்கள்…  இது சரியில்ல,  ஐயாவிற்கும் நமக்கும் வித்தியாசம் இருக்க வேண்டும்.  ஐயாவினுடைய கொள்கைக்கும்,  நமக்கும் கொஞ்சம் வித்தியாசம் இருக்கிறது…  ”கேசன் லிஸ்ட்” என்று சொல்லப்படுகிற பகுத்தறிவாளர்கள் அனைவரும் திராவிடர்கள் தான். அந்த அடிப்படையில் நிலப்பரப்பின் அடிப்படையில் தான்…  இயக்கம் அமைய வேண்டும்.

எனவே திராவிடர்  முன்னேற்ற கழகம் என்பதற்கு ( திரவிடியன் பிரகரசிவ் பெடேரசன்)  என்பதை தமிழில் மொழிபெயர்க்கும் பொழுது…  திராவிடர்  முன்னேற்றக் கழகம் இன்று இல்லாமல்… திராவிட முன்னேற்ற கழகம் என்று பெயர் சூட்ட வேண்டும் என்று அந்த பெயரை யோசனை சொன்னவரே ”மதி” அவர்கள் தான்…  அதை அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள் என தெரிவித்தார்.

Categories

Tech |