Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இரும்பு சத்து மாத்திரையை உட்கொண்ட 1 1/2 வயது குழந்தை… தீவிர சிகிச்சை மூலம் உயிர்பிழைப்பு…!!

விளையாடும் போது அதிக அளவு மாத்திரையை உட்கொண்ட குழந்தைக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்கள்  குமரேசன்- கனிமொழி.இத்தம்பதியருக்கு  ஒன்றரை வயதில் பவ்யா என்ற பெண் குழந்தை உள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு தனது குழந்தையை வீட்டில் விளையாட வைத்துவிட்டு கனிமொழி சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது குழந்தை வீட்டில் இருந்த இரும்பு சத்து மாத்திரையை எடுத்து அதிக அளவில் சாப்பிட்டுள்ளது. இதனால் குழந்தை சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தது. இதை  பார்த்து அதிர்ச்சியடைந்த குழந்தையின் பெற்றோர் குழந்தையை அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு குழந்தையின் உடல் நிலை மோசமானதால் சென்னையில் உள்ள எழும்பூர் மருத்துவமனைக்கு குழந்தையை  கொண்டு  சென்றனர். அங்கு தீவிர கண்காணிப்பு பிரிவில் மருத்துவர்கள் குழந்தைக்கு 36 மணிநேரம் சிகிச்சை அளித்து வந்தனர். நீண்ட நேர சிகிச்சைக்கு பிறகு தற்போது உடல்நிலை முன்னேற்றம் அடைந்து பவ்யா  நலமுடன் இருப்பதாகவும் விரைவில் பூரண குணமடைந்து குழந்தை  வீட்டிற்கு  திரும்பும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |