Categories
தேசிய செய்திகள்

மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கௌர் ராஜினாமா..!!

பிரதமர் திரு நரேந்திர மோடி அரசு கொண்டு வந்துள்ள விவசாய மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய உணவு பதப்படுத்துதல் மற்றும் தொழிற்சாலைகள் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கௌர் பாதல் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிரோன்மணி அகாலி தளம் கட்சி உறுப்பினர் மத்திய அமைச்சராக செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிராக மூன்று மசோதாக்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. இத்தகைய மசோதாக்கள் தங்களின் கட்சி கொள்கைகளுக்கு எதிரானது என்று அக்கட்சியின் சார்பில் மக்களவையில் இன்று பேசிய அக்காலித்தல் கட்சி தலைவர் திரு சுக்ஃபிர் சிங் பாதல் தெரிவித்தார்.

மேலும் மத்திய அரசின் இந்த விவசாயிகள் விரோத நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்கள் கட்சி சார்பில் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள ஹர்சிம்ரத் பாதல் பதவி விலகுவார் என்றும் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கௌர் பாதல் தனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் அலுவலகத்தில் கொடுத்தார்.

Categories

Tech |