ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள், திராவிடர் கழகம் கட்சியினர் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊர்திகள் அமைக்கப்படாததால் மத்திய அரசை கண்டித்து திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகாமையிலிருக்கும் பெரியார் சிலை முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு திராவிடர் கழக மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசன் தலைமை வகித்து கண்டன ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க நகர செயலாளர் இளங்கோவன், மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் கே.சி.இ. சிற்றரசு, விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தி தொடர்பாளர் தங்கபாண்டியன், திராவிட கழக மாவட்டத் தலைவர் கலைவாணன் மற்றும் மாவட்ட இளைஞரணி தலைவர் ஜின்சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டுள்ளனர். மேலும் இவற்றில் முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் அன்பழகன் நன்றி கூறியுள்ளார்.