Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்த மசோதாவை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்…!!

மத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்த மசோதாவை கைவிட வலியுறுத்தியும், மின் வாரிய தொழிலாளர் நலனில் அக்கறை இல்லாத தமிழக அரசை கண்டித்தும் , திருச்சியில் மின்வாரிய தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர. 

திருச்சி தெண்ணூறு மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் மற்றும் மின்வாரிய அலுவலகம் முன்பு, மின் வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தொழிலாளர் விரோதப் போக்கை கடைபிடிக்கும் மின் வாரியத்தை கண்டித்தும், மத்திய அரசு கொண்டுவரும் மின்சார சட்டத் திருத்த மசோதாவை கைவிட வேண்டும்.

கொரோனவால் உயிரிழந்த மின்வாரிய ஊழியர்களுக்கு, அரசு அறிவித்த தொகையினை வழங்கிட  வேண்டும் உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்க தலைவர்கள் கண்டன உரை நிகழ்த்தியும், பதாகைகளை ஏந்தியபடியும்  மின் ஊழியர்கள் மத்திய மாநில அரசுக்கு எதிராக கோஷமிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Categories

Tech |