Categories
கொரோனா தடுப்பு மருந்து தேசிய செய்திகள்

மத்திய அரசு நிதி கொடுக்காவிட்டாலும் கொரோனா தடுப்பு ஊசி இலவசம்…!!

மத்திய அரசு நிதி கொடுக்காவிட்டாலும் புதுச்சேரி மாநிலத்தில்  அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் திரு நாராயண சாமி குறிப்பிட்டுள்ளார்.

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பட்டினச்சேரி, காரைக்கால் மேடு, மண்டபத்தூர் உள்ளிட்ட 10  கிராமங்களில் மீனவர்களுக்காக கட்டப்பட்ட பணிமனையை முதலமைச்சர் திரு நாராயண சாமி திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மத்திய அரசு நிதி கொடுக்காவிட்டாலும் புதுச்சேரி மாநிலத்தில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Categories

Tech |