Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்கள்…. அகவிலைப்படி கணக்கீடு மாற்றமா?…. இதோ முழு விவரம்….!!!!

தற்போது 7-வது சம்பள கமிஷன் மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய செய்தியை அறிவித்து உள்ளது. அதாவது மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி(DA) கணக்கீடு குறித்து தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் சில மாற்றங்களை வெளியிட்டு உள்ளது. அந்த அடிப்படையில் அகவிலைப்படி(DA) ஊதிய விகித குறியீட்டின் புதிய தொடரை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பாக அகவிலைப்படியின் அடிப்படை ஆண்டு கடந்து 2016-ல் மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் 2016=100 என்ற அடிப்படை ஆண்டுடன் கூடிய புதிய WRI வரிசையானது, பழைய அடிப்படை ஆண்டு 1963-65க்கு  பதிலாக மாற்றப்படும் என்று தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

அந்த அடிப்படையில் தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி(DA) கணக்கிடும் முறை மாறும். குறிப்பிடத்தக்க வகையில், பணவீக்க தரவுகளின் அடிப்படையில் முக்கிய பொருளாதார குறிகாட்டிகளுக்கான அடிப்படை ஆண்டை அரசாங்கம் அவ்வப்போது திறுத்துகிறது. இது பொருளாதாரத்தில் வரும் மாற்றங்கள் மற்றும் தொழிலாளர்களின் ஊதிய முறை போன்றவற்றின் அடிப்படையில் செய்யப்படுகிறது. அந்த வகையில் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தேசிய புள்ளியியல் ஆணையத்தின் பரிந்துரைகளின்படி ஊதிய விகித குறியீட்டின் அடிப்படை ஆண்டு 1963-65-ல் இருந்து 2016 வரை மாற்றப்பட்டு நோக்கத்தை விரிவுபடுத்தவும், குறியீட்டை மேலும் திறமையாகவும் அமைக்கப்பட்டது.

இந்த அகவிலைப்படி(DA) தொகை என்பது அரசு ஊழியர்களின் வாழ்க்கைச் செலவை மேம்படுத்துவதற்காக வழங்கப்படும் பணம் ஆகும். அதாவது பணவீக்கம் உயர்ந்த பிறகும், ஊழியர்களின் வாழ்க்கை நிலைமை பாதிக்கப்படாமல் இருக்க இந்த கூடுதல் தொகை ஒவ்வொரு ஊழியர்களுக்கும் வழங்கப்படுகிறது. இந்த பணம் அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கானதாகும். வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் DA தொகை மத்திய அரசால் உயர்த்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |