கொரோனா பெருந்தொற்று காரணமாக மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி நிவாரணம் வழங்குவதை ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரை என 18 மாதங்களாக நிலுவையில் வைத்திருந்தது. இதனையடுத்து இறுதியாக அப்போது 17% DA மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. அதன்பின் இந்த நிலுவை காலங்களுக்கான அகவிலைப்படி உயர்வு 3 தவணைகளுக்கும் சேர்த்து 11% ஆக உயர்த்தி 20% வழங்கவும், அதன்பின் தற்போதைய தவணைக்காலத்தில் கூடுதலாக 3% உயர்த்தி மொத்தம் 31 சதவீதம் வழங்கிட இருப்பதாக தெரிவித்துள்ளது.
ஆனால் தற்போதைய அகவிலைப்படி மட்டுமே வழங்கப்படும் என்றும், நிலுவை காலத்திற்கான தொகை எதுவும் வழங்கப்படமாட்டாது என்றும் மத்திய அரசு முன்பு அறிவித்திருந்தது. இது தொடர்பாக தொடர்ந்து கோரிக்கையும், ஓய்வூதியதாரர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதமும் எழுதிய உள்ளனர். ஆகவே இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்க அமைச்சரவை செயலாளருடன் பிரதமர் மோடி ஆலோசனை கூட்டம் நடத்த இருக்கிறார்.
எனவே இந்த மாத இறுதியில் அமைச்சரவை செயலாளருடனான சந்திப்பு இருக்கலாம். இந்நிலையில் அந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. ஊழியர்களில் 18 மாத நிலுவைத் தொகை தொடர்பாக பேரவையின் கோரிக்கையை அரசு பரிசீலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 7-வது ஊதியக் குழுவின் கீழ் மத்திய அரசு ஊழியர்களுக்கு 31 சதவீத அகவிலைப்படி மற்றும் பல பெரிய சலுகைகளை வழங்கியது. ஆனால் நிலுவை தொகை பிரச்சனையானது இன்னும் தீர்க்கப்படவில்லை.
இதனிடையில் ஜேசிஎம் செயலாளர் ஷிவ் கோபால் மிஸ்ராவும் தொடர்ந்து நிலுவை தொகையை கோரி வருகிறார். அதுமட்டுமின்றி 18 மாதங்களாக நிலுவையிலுள்ள டிஏ பாக்கிகளை செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. செலவினத் துறையின் ஆண்டு அறிக்கையின்படி நாட்டில் மொத்தம் 48 லட்சம் மத்திய ஊழியர்களும், சுமார் 60 லட்சம் ஓய்வூதியதாரர்களும் இருக்கின்றனர். ஓய்வூதியதாரர்களுக்கான நிறுத்த டிஆர்-ஐ நிறுத்தும் முடிவு சரியல்ல என்று இந்திய ஓய்வூதியர் மன்றம் பிரதமர் நரேந்திர மோடிக்கு அக்டோபர் மாதம் கடிதம் எழுதியிருந்தது.
ஓய்வூதியம் பெறுபவர்களின் வாழ்வாதாரத்திற்கு இதனால் பாதிப்பு ஏற்படும் என்றும், அதை நிறுத்துவது ஓய்வூதியதாரர்களின் நலனை பாதிக்கும் என்றும் கூறப்பட்டது. JCM-இன் தேசிய கவுன்சிலின் ஷிவ் கோபால் மிஸ்ராவின் அறிக்கையின்படி, முதுநிலை ஊழியர்களின் DA நிலுவைத்தொகை 11,880 ரூபாய் முதல் 37,554 ரூபாய் வரை உள்ளது. அதேசமயம் நிலை-13 அல்லது நிலை-14 ஊழியர்களின் DA நிலுவைத் தொகை முறையே 1,44,200 ருபாய் மற்றும் 2,18,200 ஆக உள்ளது. இதன் காரணமாக நிலுவைத் தொகை வழங்கிட மத்திய அரசு ஒப்புக்கொண்டால் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு பெரும் தொகை கிடைக்கும்.