Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு…. எவ்வளவு தெரியுமா?…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக் குழுவின் அடிப்படையில் வரும் 2022-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 3 சதவீத அகவிலைப்படி (DA ) உயர்வு கிடைக்கும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.

வழக்கமாக ஒவ்வொரு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி (DA ) மற்றும் DR தொகை வருடந்தோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் இருமுறை என்ற அளவில் உயர்த்தப்படுகிறது. அதன்படி மத்திய அரசு ஊழியர்கள் பெற்று வந்த DA உயர்வுத்தொகை, கொரோனா பரவலால் கடந்த 2020 -ஆம் ஆண்டு முதல் 3 தவணைகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான 4 தவணைக்கான DA உயர்வு 31 சதவீதமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக் குழுவின் கீழ் 2022-ஆம் ஆண்டு தொடக்கத்தில் 3 சதவீத அகவிலைப்படி (DA) உயர்வு கிடைக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையின்படி “இந்த DA உயர்வால் ஊழியர்களின் சம்பள உயர்வு புத்தாண்டில் 20,000 ரூபாய் வரை உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூடுதல் 3 % உயர்வு பற்றிய அறிக்கைகள் இன்னும் அரசாங்கத்தால் உறுதிப்படுத்தப்படவில்லை. மேலும் அதை செயல்படுத்துவது தொடர்பாக அதிகாரபூர்வ அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.

இப்போது பொதுத்துறை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் இந்த DA  தொகை, ஊழியர்களின் மொத்த சம்பளத்தின் ஒரு பகுதியை கொண்டுள்ளது. இத்தொகை பணவீக்க பாதிப்பினை ஈடுகட்டுவதற்காகவும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இதனிடையே பிட்மென்ட் காரணியை 3.68 சதவீதம் உயர்த்துவது தொடர்பாக மத்திய அரசு விவாதித்து வருவதாகவும், இது சம்பளத்தை உயர்த்தக்கூடும் என்றும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்த உயர்வு அமல்படுத்தப்பட்டால் அரசு ஊழியர்களின் சம்பளம் 8,000 ரூபாய் ஆக உயர்த்தப்பட்டு அடிப்படைத் தொகை 26,000 ரூபாயாக அதிகரிக்கும் என்பதும் கவனிக்கத்தக்கது.

Categories

Tech |