மத்திய அரசு ஊழியர்களுக்கான 7 வது ஊதிய குழுவின் பரிந்துரைகளின் பலன்களை ஊழியர்கள் பெறுகிறார்கள். ஆனால் தங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டதை விட குறைவான சம்பளம் கிடைப்பதாக ஊழியர்கள் புகார் அளித்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் 8 வது ஊதியக்குழுவை அமைக்க கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து ஊழியர் சங்கங்கள் தெரிவித்த தகவலின் படி, இது குறித்து குறிப்பாணை தயார் செய்து விரைவில் அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குறிப்பாணையில் பரிந்துரைகளின் படி சம்பளத்தை உயர்த்த வேண்டும் அல்லது 8 வது ஊதியக்குழுவை கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்படும். ஆனால் மறுபுறம் 8 வது ஊதியக்குழுவை அமல்படுத்தது குறித்து எந்த பரிசீலனையும் இல்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இருப்பினும் இதையும் மீறி அரசு ஆலோசிக்கலாம் என்ற நம்பிக்கையில் ஊழியர்கள் உள்ளனர்.
தற்போது குறைந்தபட்ச ஊதிய உயர்வு வரம்பு ரூ.18,000 வைக்கப்பட்டுள்ளதாக மத்திய பணியாளர் அமைப்புகள் கூறுகிறது. இதில் ஃபிட்மென்ட் ஃபேக்டருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது ஃபிட்மெண்ட் காரணி 2.57 மடங்காக உள்ளது. இருப்பினும் 7 வது ஊதிய குழுவில் 3.68 மடங்கு வரை வைத்திருக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதற்கு அரசு ஒப்புதல் அளித்தால், ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000 லிருந்து ரூ.20,000 ஆக உயரும். இதனையடுத்து 7 வது ஊதியக்குழுவுக்கு பிறகு புதிய ஊதியக்குழு வராது என்று தகவல்கள் தெரிவிக்கின்றனர். அதற்கு மாறாக அரசு ஊழியர்களும் சம்பளத்தை தானாக உயர்த்த ஒரு புதிய முறையை அரசு மேம்படுத்த போவதாக செய்திகள் வருகிறது. இந்த புதிய பார்முலா படி அகவிலைப்படி 50% மேல் இருந்தால் சம்பளத்தில் தானாகவே திருத்தம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இது நடைமுறைக்கு வந்தால் 68 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 52 லட்சம் ஓய்வுதியதாரர்களும் நேரடி பலன் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.