திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பேராசிரியர் தலைமையில் கீழடியில் அகழாய்வு நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, மணலூர் ஆகிய பகுதிகளில் ஆறாம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. கொரோனா ஊரடங்காள் நிறுத்தப்பட்ட அகலாய்வு பணிகள் ஜூன் மாதம் முதல் மீண்டும் தொடங்கியது. இந்நிலையில் தமிழக அரசின் உத்தரவுப்படி திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழக பேராசிரியர் திரு பெருமாள் தலைமையில் குழுவொன்று கீழடிக்கு ஆய்வுக்காக சென்றுள்ளது.
கீழடி அகழாய்வுகாக தோண்டப்பட்ட குழியில் உள்ள மணலையும், கீழடிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ள வைகையாற்று மணலையும் ஒப்பீட்டு ஆய்வுகள் நடத்தப் படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.