பல்கலைக்கழக மானியக் குழு மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டப் படிப்புகளில் சேர்வதற்கு நாடு முழுவதும் பொதுவான நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு 2022- 23 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை இந்த தேர்வின் அடிப்படையில் தான் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து தேசிய தேர்வு முகாம் சார்பில் நாடு முழுவதும் மருத்துவப் படிப்பிற்காக சேர்க்கைக்கு நீட் தேர்வு நடத்துவது போல, மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டப்படிப்புக்கு சேர்வதற்கு சி.யூ.இ.டி (CUET) என்ற மத்திய பல்கலைக்கழக நுழைவு தேர்வு நடத்தப்பட்டு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் இல்லாமல் இந்த தேர்வின் அடிப்படையில் தான் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த தேர்வுக்கான ஆன்லைன் பதிவு ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் தொடங்கி ஜூன் மாதத்தில் இந்தி, தெலுங்கு, குஜராத்தி, தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் தேர்வு நடைபெறும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் பல்கலைக்கழக மானியக் குழு புதிய கல்விக் கொள்கையின் சாரம்சத்தில் படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நுழைவுத் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் மாநில மற்றும் நகர்நிலை பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சேர்க்கை நடத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.