மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ளதை முன்னிட்டு அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31-ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்குகிறது.
இதையொட்டி அவையை அமைதியாக நடத்துவது குறித்து ஆலோசிப்பதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மக்களவையின் அனைத்து கட்சி கூட்டத்திற்கு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும், மாநிலங்களவை அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அவையின் தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான வெங்கைய நாயுடு அழைப்பு விடுத்துள்ளனர்.
இரு அவையின் அனைத்து கட்சி கூட்டத்திற்கும், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சருக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.