Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு…. 31 சதவீதம் DA நிலுவை தொகை?…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

கடந்த 2020 ஆம் வருடம் முதல் 3 தவணைகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி(DA) தொகை 31 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த அகவிலைப்படி(DA) தொகை எப்போது கொடுக்கப்படும் என எதிர்பார்த்து இருந்த அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் வகையில் தற்போது புதிய தகவல் கிடைத்துள்ளது. அதாவது அரசு ஊழியர்களுக்கான DA நிவாரணம் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.

அதற்கு முன்பாக இதுகுறித்து அமைச்சரவை செயலாளருடன், அமைச்சகம் சந்திப்பை நடத்தலாம் என்று தெரிகிறது. தற்போது JCM தேசிய கவுன்சில், பணியாளர் மற்றும் பயிற்சித் துறை, நிதி அமைச்சகம் போன்றவற்றுக்கு இடையே நிலுவை தொகை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. அதேசமயம் ஊடகச் செய்திகளின்படி 18 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலுவைத் தொகையை ஒரே தடவையில் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையை கவுன்சில், அரசாங்கத்திடம் முன் வைத்துள்ளது.

இந்த நிலையில் இந்த மாதம் 18 மாத நிலுவை தொகையை ஒரு முறையில் வழங்குவது தொடர்பாக மத்திய அமைச்சரவை செயலாளருடன் விவாதிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சம்பள கமிஷன் அறிக்கையின்படி, நாடு முழுவதும் மொத்தம் 33 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் இருக்கின்றனர். தற்போது நிலுவையில் உள்ள 18 மாத DA தொகை குறித்து பிரதமர் இறுதி முடிவு எடுத்தால், ஊழியர்களின் வங்கி கணக்கில் பெரும் தொகை வந்து சேரும். இதன் மூலமாக 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 65 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள்.

Categories

Tech |