நாடு முழுவதிலும் அரசுத்துறையில் வேலை பார்க்கும் அனைத்து ஊழியர்களுக்கும் அரசு பல்வேறு புதிய திட்டம் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி கடந்த ஆண்டு பரவிய கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட பொருளாதார நிதி நெருக்கடியினால் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் பொருளாதார நிதி நெருக்கடியை சரிசெய்து, மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்த முடிவு செய்தது.
இதனையடுத்து கடந்த அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 28% அகவிலைப்படியோடு 3 சதவீதம் உயர்த்தி 31 சதவீதம் வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் மீண்டும் அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தற்போது வழங்கப்பட்டு வரும் 31 சதவீத அகவிலைப்படியோடு 3 சதவீதம் உயர்த்தி 34 சதவீதமாக வழங்க மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தொடர்ந்து தகவல் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் இதுவரை நிலுவையில் இருந்து வரும் 18 மாத நிலுவை அகவிலைப்படி உயர்வு வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த 3 சதவீத அகவிலைப்படி உயர்த்துதல் மற்றும் 18 மாத நிலுவை அகவிலைப்படி உயர்வு வழங்குதல் மத்திய அரசு ஊழியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த 34 சதவீத அகவிலைப்படி உயர்வு மூலமாக 18,000 ரூ அடிப்படை ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு 6,480 ரூ மற்றும் 56,900 அடிப்படை ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு 20,484 வழங்கப்படும். இந்த தொகை கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பு வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.