பொதுவாக பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் ஒரு சில மாணவர்களுக்கு கற்றல் திறன் என்பது அதிகமாக இருக்கும். அதனால் அவர்கள் ஆசிரியர்கள் கற்று தரும் பாடங்களை எளிதில் புரிந்துகொண்டு கற்றுக் கொள்கிறார்கள். ஆனால் ஒரு சில மாணவர்களுக்கு கற்றல் திறன் குறைவாக இருக்கும். அப்படிப்பட்ட மாணவர்கள் ஆசிரியர்கள் வீட்டுப்பாடம் கொடுக்கும் போதோ அல்லது வீட்டிற்கு வந்த பிறகு கடினமான பாடங்களில் உள்ளவற்றை தானாகப் படிக்கும் முயற்சிக்கும்போது சிரமப்படுகிறார்கள்.
வீட்டிற்கு சென்ற பிறகு கணிதம், இயற்பியல், வேதியல் போன்றவற்றில் உள்ள ஒரு சில கணக்குகளை போட முயற்சிக்கும் போது, அதில் சரியாக விடை கிடைக்குமா என்ற அச்சமும் இருக்கும். அதனால் சிலர் முயற்சிப்பது கூட கிடையாது. அப்படிப்பட்ட மாணவர்களின் சிரமத்தை எளிதில் போக்குவதற்காக SACRITIC BY GOOGLE என்ற புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதை ப்ளே ஸ்டோரில் சென்று நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம். அதன் பிறகு அதனை open செய்தால் camera access கேட்கும். அதில் உங்களுக்கு எந்த கணக்கிற்கு விடை வேண்டுமோ அதனை அதில் ஸ்கேன் செய்தால் அதற்கான மொத்த விடையும் உங்களுக்கு கிடைக்கும். கணிதம்,இயற்பியல் மற்றும் வேதியியல் போன்ற பாடங்களில் ஏதாவது ஒரு கணக்கைத் தீர்க்க உங்களுக்கு சிரமமாக இருந்தால் அந்த கணக்கை இதில் ஸ்கேன் செய்தால் மட்டும் போதும் step by step ஆக உங்களுக்கு மொத்த விடையும் கிடைத்து விடும்.
எவ்வளவு பெரிய கணக்காக இருந்தாலும் அதற்கான விடை உங்களுக்கு எளிதில் கிடைத்துவிடும். எனவே இனி கணக்கு, வேதியல்,இயற்பியல் போன்ற பாடங்களில் உள்ள கணக்குகளை யாருடைய உதவியும் இல்லாமல் நீங்களே கற்றுக் கொள்ளலாம். நீங்கள் மட்டும் இதனை தெரிந்து கொள்ளாமல் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் இதனை தெரியப்படுத்துங்கள்.