Categories
உலக செய்திகள்

‘மக்கள் பயன்படுத்த வேண்டாம்’…. திரும்பப் பெறப்படும் மாத்திரைகள்…. கனடா மருந்து தயாரிப்பு நிறுவனம் தகவல்….!!

கனடாவில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனம் மாத்திரைகளை திரும்பப்பெறப் போவதாக கூறியுள்ளனர்.

நம்மில் பெரும்பாலோனோர் தலைவலி, காய்ச்சல், உடம்பு வலி, ஜலதோஷம் போன்ற அனைத்து பிரச்சினைகளுக்கும் பாராசிட்டமால் மாத்திரைகளை பயன்படுத்துகிறோம். மேலும் பெண்கள் மாதவிடாய் காலங்களில் அதிகளவில் வலிநீக்கிகளை எடுத்துக் கொள்கின்றனர். ஆனால் அவ்வாறு எடுத்துக்கொள்ளும் வலிநீக்கிகள்  நமது உடம்பிற்கு பெரும் ஆபத்தை விளைவிக்கக் கூடும். எடுத்துக்காட்டாக பாராசிட்டமால் மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் தலைசுற்றல், வாந்தி, மயக்கம் அதிக வியர்வை வெளியேற்றம், பசியின்மை, வயிற்றுவலி போன்ற உடல் உபாதைகள் ஏற்படும்.

அதிலும் அடிவயிறு வலி கல்லீரல் பாதிப்பின் முதல் அறிகுறியாகும். மேலும் கல்லீரல் செயலிழப்பினால் மரணம் கூட ஏற்படலாம். இந்த நிலையில் கனடாவில் உள்ள Teva Canada என்னும் மருந்து தயாரிப்பு நிறுவனம் Novo-Gesic Forte acetaminophen  என்ற 500 மில்லிகிராம் மாத்திரை பாக்கெட்களை திரும்ப பெற்றுக்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளது. குறிப்பாக DIN 00482323, lot number 35364729A மற்றும் 35217483A போன்ற எண்களை கொண்ட மாத்திரைகளையும் ஜூன் 2023 காலாவதி தேதி என்று போடப்பட்டிருக்கும் மாத்திரைகளையும் உபயோகப்படுத்த வேண்டாம் என்றும் அவற்றைத் திருப்பி தந்துவிடுமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஏனெனில் அந்த மாத்திரைகள் உள்ள அட்டைகளில் ‘do not take more than 4,000 mg (12 tablets) in 24 hours’ என்று எழுதப்பட்டுள்ளது. அதாவது 24 மணி நேரத்திற்குள் 12 மாத்திரைகளுக்கு மேல் எடுத்துக்கொள்ளக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் 8 மாத்திரைகளுக்கு அதிகமாக பயன்படுத்தக்கூடாது என்று தான் எழுதி இருக்க வேண்டும். மாறாக 12 என்று உள்ளதால் அவற்றை திரும்பப் பெற்றுக்கொள்ளப்போவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |