Categories
தேசிய செய்திகள்

144-இல்… மது விற்பனை…. கண்டித்த காவலருக்கு….. அடி,உதையுடன்…. 2 மணி நேரம் சிறை…!!

மத்திய பிரதேசத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள சூழ்நிலையில், டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதை கண்டித்த, காவல்துறை அதிகாரியை பொதுமக்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மத்தியபிரதேசம் மாநிலன் ராம்பூர் என்னும் கிராமத்தில் டாஸ்மாக் கடை திறந்து விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக காவலர் ஒருவருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவர் தனியாக அங்கே சென்று பார்வையிட்டபோது, கடை திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

ஊரடங்கு நேரத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்தவரை கண்டித்ததோடு, அங்கு கூடியிருந்த மக்களிடம் சமூக விலகல் குறித்து அறிவுரை கூறி வந்தார். அப்போது அங்கிருந்த மது பிரியர்கள் ஆத்திரமடைந்து, காவலரை பலமாக தாக்கியதோடு இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக சிறையில் அடைத்தனர். பின் இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், காவல்துறை அதிகாரிகள் அதிகாரியை மீட்டதுடன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுண்டு வருகின்றனர்.

Categories

Tech |