முன்று நாட்கள் மதுபான கடைகள் மூடப்படும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தின் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் கூறியதாவது, இம்மாவட்டத்தில் மாநில வாணிபக் கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்ற அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் மதுக்கூடங்கள், நட்சத்திர அந்தஸ்து ஹோட்டல்களில் இருக்கும் மதுக்கூடங்கள் ஆகியவற்றை வருகின்ற 15-ஆம் தேதி, 18-ஆம் தேதி மற்றும் 26-ஆம் தேதி மூடி வைக்க வேண்டும் என கலெக்டர் கூறியுள்ளார்.
இதனை அடுத்து அன்றைய தினங்களில் மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது எனவும், மீறி விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளில் விற்பனையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து அன்றைய நாட்களில் மது கூடத்தில் மதுபான விற்பனை செய்வதாக தெரியவந்தாலும் மது கூடத்தின் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல், உரிமங்களை ரத்து செய்தல் போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார். மேலும் மது கூட உரிமைதாரர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.