Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மது கடையை உடைத்து திருடிய நபர்கள்…!!

உசிலம்பட்டி அருகே பூட்டியிருந்த மதுக்கடையில் ஷட்டரை உடைத்து மதுபாட்டில்கள் திருடப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குப்பணம்பட்டி கிராமத்தில் அரசு மதுபான கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மதுக்கடையில் காவலாளி இல்லாத நிலையில் கடந்த இரு நாட்களாக குப்பனும் பட்டியை சுற்றியுள்ள ஏராளமான பகுதிகளில் புரட்டாசி திருவிழா நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மது கடையின் ஷட்டரை உடைக்கப்பட்டு மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டதை கண்டு மது கடை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து ஊழியர்கள் அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்துக்கு வந்த உசிலம்பட்டி தாலுகா காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |