கணவரை கொன்று கிணற்றில் வீசிய பெண் மற்றும் தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள பரவாக்கோட்டை சாமிநாதன் தெருவில் பாண்டியன் என்பவர் பெயிண்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும் 2 மகன்களும் இருக்கின்றனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு பாண்டியன் திடீரென மாயமான நிலையில் கடந்த 19-ஆம் தேதி அதே பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த கிணற்றில் கை, கால்கள் கட்டப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயணைப்புத்துறை வீரர்களின் உதவியுடன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது பாண்டியனை மனைவி மகேஸ்வரி மற்றும் அவரது தந்தை கோவிந்தராஜ் இருவரும் சேர்ந்து கட்டையால் அடித்துக் கொன்று உடலை கிணற்றில் வீசியது தெரியவந்தது. இதனையடுத்து மகேஸ்வரி மற்றும் அவரது தந்தை கோவிந்தராஜ் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அதன்பின் மகேஸ்வரி காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில் “எனது கணவர் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மதுபோதையில் என்னையும், எனது மகன்களையும் அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் எனது தந்தையுடன் சேர்ந்து கட்டையால் தன் கணவரை அடித்துக் கொலை செய்து உடலை கிணற்றில் வீசியதாக தெரிவித்துள்ளார்.”