மதுபோதையில் தன்னைத் தானே தாக்கிக் கொண்ட வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பனப்பாக்கம் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மல்லிகா என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதியருக்கு திருமணம் ஆகி 10 வருடங்களுக்கு மேல் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை.எனவே வெங்கடேஷ் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி மதுப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இந்நிலையில் வேலைக்கு சென்ற வெங்கடேசன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.இதனையடுத்து வெங்கடேசன் மது அருந்திவிட்டு ரத்த காயங்களுடன் கீழே விழுந்து கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்பின் மல்லிகா தனது உறவினர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளார்.
அங்கு வெங்கடேசன் மதுபோதையில் தன்னைத்தானே கல்லால் தாக்கிக் கொண்டதால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி கிடந்துள்ளார். இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வெங்கடேசனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.