Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

மது பாட்டில்களை  பதுக்கி வைத்து ….விற்பனை செய்த வாலிபர் கைது …!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் மது பாட்டில்களை  பதுக்கி வைத்து, விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. இதனைப் பயன்படுத்தி பல இடங்களில் சிலர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தை அடுத்துள்ள கடம்பத்தூர் ஒன்றியம் செஞ்சி கிராமத்தில், உள்ள வயல்வெளி பகுதியில் சட்டவிரோதமாக சிலர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து  கடம்பத்தூர் போலீசார் நேற்று ,செஞ்சி கிராமத்தில் உள்ள வயல்வெளி பகுதிகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த மதி ( 27 வயது) வாலிபர்  சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதனால் அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 220 மது பாட்டில்களை பறிமுதல் செய்து ,விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |