சட்ட விரோதமாக குளிர்பான கடையில் மது பாக்கெட்டுகளை விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்றம்பள்ளி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சோமநாயகன்பட்டி இடத்தில் கர்நாடக மாநிலத்தின் மது பாக்கெட்டுகளை விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதனை அடுத்து தொம்மசிமேடு பகுதியில் இருக்கும் குளிர்பான கடையில் கர்நாடக மாநிலத்தின் மது பாக்கெட்டுகளை மறைத்து வைத்து விற்பனை செய்த ரஞ்சித் என்பவரை காவல்துறையினர் கையும் களவுமாக கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த மது பாட்டில்கள் மற்றும் கர்நாடக மாநிலத்தின் மது பாக்கெட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.