மது பாட்டில்கள் விற்பனை செய்த 2 முதியவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள அய்யர்மலை பகுதியில் மது விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு பல புகார்கள் வந்துள்ளது.
இந்நிலையில் அதன் அடிப்படையில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு மது விற்பனை செய்து கொண்டிருந்த ராமசாமி மற்றும் கணேசன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து தலா 6 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.