Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அந்த தேதி இல்லை…. மது பிரியர்களின் புகார்…. அதிகாரி பேச்சுவார்த்தை….!!

டாஸ்மார்க்கில் காலாவதி தேதி குறிப்பிடாத மதுபானங்களை விற்பதாக மது பிரியர்கள் புகார் கொடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் காமநாயக்கன்பாளையத்தில் உள்ள அரசு டாஸ்மார்க்கில் காலாவதியான மதுபானங்கள் விற்பதாக மதுபிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஒருவர் கூறியபோது “நான் மது வாங்கிய போது அதில் காலாவதியாகும் தேதி இல்லை. இதுகுறித்து மதுபான விற்பனையாளரிடம் நான் கேட்டபோது அதற்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார். எனவே கொரோனா காலத்தில் விற்காமல் இருந்த பழைய மதுபானங்கள் தற்போது விற்பனை செய்கிறார்கள் என்று அச்சம் தெரிவித்துள்ளார்”.

இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அலுவலரிடம் கேட்டபோது உணவுப் பொருட்கள் பாதுகாப்பு சட்டத்தின்படி எந்த உணவுப் பொருளாக இருந்தாலும் அதில் காலாவதி தேதி குறிப்பிட வேண்டியது அவசியமாக இருக்கிறது. இதனால் மதுபான பாட்டிலிலும் காலாவதி தேதி குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். எனவே பாட்டிலில் ஏதாவது ஒரு இடத்தில் காலாவதி தேதி குறிப்பிட்டு இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என்று பாதுகாப்பு துறை அலுவலர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |