Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மது போதையில் தகராறு செய்த மீன் வியாபாரியை …! கொலை செய்த 17 வயது சிறுவன் ….கைது செய்த போலீசார் …!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் மீன் வியாபாரியை , 17 வயது சிறுவன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் வாணாபுரம் அருகிலுள்ள ,  தச்சம்பட்டு புதூர்  பகுதியை சேர்ந்த குழந்தைசாமியின் மகன் கிறிஸ்துராஜ். 40 வயதான கிறிஸ்துராஜூக்கு ரேகா (வயது 35)என்ற மனைவியும் ,கிறிஸ்டி(வயது 5), கிறிஸ்டோபர் (வயது 3) என்ற 2 குழந்தைகள்  உள்ளனர். மீன் வியாபாரம் செய்து வந்த கிறிஸ்துராஜுக்கும் ,அவரது  மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இரண்டு மாதங்களுக்கு முன் அவருடைய மனைவி ரேகா தனது சொந்த ஊரான சென்னைக்கு தன் குழந்தைகளுடன் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால்  கிறிஸ்துராஜ் மட்டும்  தனியாக வசித்து வந்தார்.  இந்நிலையில் கிறிஸ்துராஜ் நேற்று காலை அவருடைய வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக இருந்தார்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் தச்சம்பட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் பேரில் திருவண்ணாமலை கிராமிய துணை போலீஸ் சூப்பிரண்டான அண்ணாதுரை, இன்ஸ்பெக்டர்  அழகுராணி, தச்சம்பட்டு சப்-இன்ஸ்பெக்டராக விநாயகமூர்த்தி மற்றும்  போலீசார் ஆகியோர் சம்பவ  இடத்திற்கு விரைந்து சென்றனர். பின் கிறிஸ்து ராஜ்  உடலை, உடற்கூறு ஆய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு, எடுத்துச் சென்றனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது கள்ளக்குறிச்சி மாவட்டம்  ஈருடையாம்பட்டு கிராமத்தை சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் தன்னுடைய உறவினர் ஊரான தச்சம்பட்டு புதூருக்கு வந்துள்ளார்.

இந்நிலையில் சிறுவன் நேற்று முன்தினம் கிறிஸ்து ராஜுடன் இருந்துள்ளதாகவும் ,அப்போது கிறிஸ்து ராஜ் மதுபோதையில் ,சிறுவனிடம் தகராறில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிறுவன் கத்தியால்கிறிஸ்து ராஜுவின் , கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அவரிடம் இருந்த ரூபாய் 15,000 பணம் மற்றும் கையில் இருந்த 2 மோதிரத்தை, எடுத்துக் கொண்டு தலைமறைவாகி விட்டான் ,என்று  விசாரணையில் தெரியவந்தது. இதனால் அந்தப் பகுதியில் தலைமறைவாக இருந்த சிறுவனை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து பறித்த பணம் மற்றும் மோதிரத்தை பறிமுதல் செய்தனர். கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சிறுவன் கடலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டார்.  17 வயது சிறுவன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Categories

Tech |