ஆடம்பூர் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மணியாரகுப்பம் சுடுகாட்டு பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் உமராபாத் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு முட்புதரின் மறைவில் நின்றுகொண்டு ஒருவர் மது விற்பனை செய்து கொண்டிருந்ததை காவல் துறையினர் பார்த்துள்ளனர்.
இதனையடுத்து காவல்துறையினர் அந்த நபரை கையும் களவுமாக பிடித்து விசாரித்தபோது, அவர் அதே பகுதியில் வசித்து வரும் சுதாகர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவரிடம் இருந்த 100 லிட்டர் மதுபானங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அதன்பின் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த குற்றத்திற்காக சுதாகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.