Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் வைத்து விற்பனை…. வசமா சிக்கிய வாலிபர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

இண்டூர் அருகில் சட்டவிரோதமாக மோட்டார் சைக்கிள் மதுபாட்டில்களை விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்திலுள்ள சின்னக்காம்பட்டி கிராமத்தில் மோட்டார் சைக்கிள் மூலம் மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக இண்டூர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் காவல்துறையினர் அந்த பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது மேல்குள்ளம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜி என்பவர் மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்களை விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் ராஜியை கைது செய்து அவரிடம் இருந்த 11 மது பாட்டில்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |