மது விற்பனை செய்த 2 நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள வாளாந்தூர் பகுதியில் மது விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அப்பகுதியில் வீட்டின் அருகில் வைத்து மது விற்பனை செய்து கொண்டிருந்த ராஜ்குமார் மற்றும் பொன்னர் ஆகிய இரண்டு பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.