சட்டவிரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் குமார் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது குமார் மது விற்பனை செய்து கொண்டிருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதனையடுத்து தப்பி ஓட முயன்ற குமாரை காவல்துறையினர் மடக்கிப்பிடித்து கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த 24 மது பாட்டில்களும் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.