சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சின்னையன் புதூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் சந்தேகப்படும்படியான நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் மருதுபாண்டி என்பதும், சட்டவிரோதமாக மதுபாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்வதும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து மருதுபாண்டியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.