Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ரோந்து பணியில் போலீஸார்…. மது பாட்டில்களுடன் வாலிபர்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக மது விற்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரான ராஜேஷ் முன்னிலையில் காவல்துறையினர் தீடீர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அண்ணா நகர் பேருந்து நிலையம் முன்பு காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டபோது அதே பகுதியில் சேர்ந்த மாரிராஜ் என்பவர் மதுபாட்டில்களை விற்பனை செய்வதை கண்டு பிடித்துள்ளனர்.

இதனை அடுத்து மாரிராஜை மடக்கிப் பிடித்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் அவரிடம் 26  மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்துள்ளது.  பின்னர்  காவல்துறையினர் மாரிராஜிடம் இருந்த 26 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் மாரிராஜின் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |